Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வெயில், மழையை கண்டுகொள்ளாமல் இலங்கையில் தொடரும் மக்கள் போராட்டம்

இலங்கையில் அதிபருக்கு எதிராக, காலிமுகத்திடலில் மூன்றாவது நாள் இரவிலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடு முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, கொழும்பு காலிமுகத்திடலில் அதிபர் செயலகம் முன்பாக வெள்ளிக்கிழமை மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கோட்டாபய ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஒன்று கூடிய மக்கள், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, சமூக ஆர்வலர்கள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினர். மூன்றாவது நாள் இரவிலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டினர். அதிபருக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

image

இதனிடையே, திருமணம் முடிந்த கையுடன் மணக்கோலத்தில் புதுமண தம்பதி போராட்டக் களத்தில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிக்கலாம்: அனைத்து கட்சிகள் பங்கேற்கும் தேசிய அரசு' - அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் முயற்சி தோல்வி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்