Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தென்பட்டது பிறை... தொடங்கியது ரமலான் நோன்பு

ரமலான் மாதம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் நோன்பை தொடங்கினர்.

இஸ்லாமிய காலண்டரின் ஒன்பதாவது மாதம் ரமலான் மாதமாகும். அமாவாசை முடிந்து பிறை தென்படும் நாளிலிருந்து ரமலான் மாதம் தொடங்கும். அதன்படி தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக தலைமை காஜி சலாஹூதீன் முகமது அயூப் கூறினார். இதையடுத்து நாகூர் ஆண்டவர் தர்கா உள்பட 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று நோன்பை தொடங்கினர்.

image

இதேபோல கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பிறை தெரிந்தது முதல் 30 நாட்களுக்கு நோன்பு நோற்று அதன் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த 30 நாட்களும் அதிகாலை 4.15 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பிருந்து மாலையில், தொழுகையை முடித்து கொண்டு உணவை எடுத்துக் கொடுத்துக் கொள்வர். ரம்ஜான் நோன்பு தொடங்கி நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ’149 சமத்துவபுரங்களில் 14,880 வீடுகள் சீரமைப்பு’ - தமிழக அரசு அரசாணை வெளியீடு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்