Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காதியின் புதிய சாதனை - இத்தனை கோடிகளில் வியாபாரமா?

இந்தியாவில் உள்ள அனைத்து எஃப்.எம்.சி.ஜி. (வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்) நிறுவனங்களை விட அதிக வியாபாரம் செய்து, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

2021-22 நிதியாண்டில் ரூ 1 லட்சம் கோடி விற்று முதலை தாண்டி, காதி ரூ 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய விற்றுமுதலைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ 1 லட்சம் கோடி விற்றுமுதல் பெற்ற நாட்டின் ஒரே நிறுவனமாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உருவெடுத்துள்ளது.

To Help Students Get Internship Opportunities, AICTE Ties with Khadi & Village Industries Commission (KVIC) | IndianWeb2.com

2020-21-ல் ரூ 95, 741.74 கோடியாக இருந்த காதியின் ஒட்டுமொத்த விற்றுமுதல், 2021-22-ல் ரூ.1,15,415.22 கோடியை எட்டி 20.54% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2014-15 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021-22 ஆம் ஆண்டில் காதி மற்றும் கிராமத் தொழில் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 172% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் மொத்த விற்பனை 248% அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் காதி பொருட்களை அதிகம் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது. காதி பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் கைவினை கலைஞர்கள், பழங்குடிகள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் உள்ளிட்டோர் வாழ்வாதாரம் வலுப்பெறும் என்பது அவரது கருத்து.

Khadi and Village Industries Commission: Govt looks to position khadi as 'Indian brand' with bigger play abroad, Retail News, ET Retail

கொவிட்-19 பெருந்தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, சென்ற நிதியாண்டில் முதல் 3 மாதங்களில், அதாவது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டில் பகுதியளவு ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இந்த மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா, நாட்டில் காதியை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான ஆதரவே காதியின் அற்புதமான வளர்ச்சிக்கு காரணம் என்று கூறினார். அதே நேரத்தில், புதுமையான திட்டங்கள், ஆக்கப்பூர்வமான சந்தைப்படுத்தல் யோசனைகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் ஆதரவு ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் காதியின் வளர்ச்சியை அதிகரித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

“சுதேசி” மற்றும் குறிப்பாக “காதி”யை ஊக்குவிப்பதன் மூலம் தன்னிறைவை அடைய பிரதமரின் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் வலுவான தாக்கத்தை உண்டாகியுள்ளன என அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இன்று நாட்டில் உள்ள அனைத்து எஃப்எம்சிஜி நிறுவனங்களையும் விட காதி முன்னோக்கி நிற்கிறது. புதிய அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், காதியின் தயாரிப்பு வரம்பை பன்முகப்படுத்துவதன் மூலமும், வேறெந்த எஃப்எம்சிஜி நிறுவனத்தாலும் சாதிக்க முடியாத மிகப்பெரிய வளர்ச்சியை காதி அடைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

- கணபதி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்