Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை

ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டு பொது முடக்க காலத்தில் இந்தியாவில் வலிமையாக வேரூன்றியது. 2020 வருடத்தில் மட்டும் ஆன்லைன் கேம் விளையாடுவோரின் எண்ணிக்கை 170% அதிகரித்துள்ளது. டிரீம் 11, நசாரா, பே டிஎம் ஃபர்ஸ்ட் கேம்ஸ், 99 கேம்ஸ், ஹைபர்லின்க் இன்ஃபோசிஸ்டம், ஜென்சார் டெக்னாலஜீஸ், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி, ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பிரபலமானவை.

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. 2021- 22 ஆம் நிதி ஆண்டில் 28% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ10,100 கோடி என அகில இந்திய கேமிங் சம்மேளனம் ஆன ஃபிக்கி தெரிவித்து இருந்தது. அதேபோல், வரும் 2023ஆம் ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ20,000 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.

இதனிடையே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வருவது தொடர் கதையாகியுள்ளது. சிலர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள். 

இந்நிலையில், “ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும்” என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

image

பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல; மோசடி ரம்மி. ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்னை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்