Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தோனி அந்த முடிவை எடுக்காமலே இருந்திருக்கலாம்..! பறிபோனது சிஎஸ்கேவின் கடைசி வாய்ப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. பிளே ஆஃப்க்கான வாய்ப்பை தக்க வைக்க வேண்டிய முக்கியமானதொரு போட்டியில் சென்னை வீரர்கள் மிகவும் பொறுப்ப முறையில் விளையாடியது சிஎஸ்கே ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், அவர்களுக்கு இந்தப் போட்டியில் இருந்த ஒரே ஆறுதல் தோனியின் பேட்டிங் தான். சென்னை அணி முதலில் விளையாடி 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி 33 பந்துகளில் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை அணிக்கு எதிரான தனது ஆதிக்கத்தையும் நிலைநாட்டியுள்ளது.

image

கான்வேவை காலி செய்த பவர் கட்!

இந்தப் போட்டியில் முக்கியமானதொரு நேரத்தில் தோனி எடுத்த அந்த முடிவை, அவர் எடுக்காமலேயே இருந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது, சென்னை முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. முதல் ஓவரில் ஆரம்பித்த விக்கெட் வீழ்ச்சி அதன் பிறகும் நின்றபாடில்லை. 39 ரன்களை எட்டுவதற்குள் சிஎஸ்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதில் கான்வே விக்கெட் வேண்டுமென்றால் டிஆர்எஸ் இல்லாததன் விளைவாக இருக்கலாம். மற்றவர்கள் பொறுப்பற்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வழக்கமாக கடைசி கட்டத்தில் இறங்கி விளையாடு கேப்டன் தோனி இன்று ஆட்டத்தின் 5வது ஓவரிலேயே இறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு முனையில் அவர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணமே இருந்தது.

image

சீட்டுகட்டு போல் சரிந்த விக்கெட்டுகள்!

விக்கெட் வீழ்ந்தாலும் இடையில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு சற்றே மகிழ்ச்சி கொடுத்தார். விக்கெட் வீழ்ந்து கொண்டே இருந்தாலும் தோனி களத்தில் இருக்கும் வரை நிச்சயம் ஒரு கவுரவமான ஸ்கோரை சிஎஸ்கே எட்டும் என்றே எல்லோரும் கருதினார்கள். ஆனால், 81 ரன்களுக்கு எல்லாம் 9 விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டது. அவர் பேட்டிங் செய்யாத போது மறுமுனையில் விக்கெட் வீழ்ந்து கொண்டே இருந்தது. ஆனால், கடைசியில் அவரே ஸ்டிரைக் செய்ய நினைத்து இரண்டு ஓவர்களை தாக்குப்பிடித்தார். களத்தில் முகேஷ் சவுத்ரியும், தோனியும் இருந்தனர். 13.3 ஆவது ஓவரில் 9வது விக்கெட் வீழ்ந்ததில் இருந்து பெரும்பாலான பந்துகளை தோனியே எதிர்கொண்டார். சிங்கிள் அடிப்பதை தவிர்த்தார். 16வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி பறக்கவிட்டார். அந்த ஓவரின் கடைசி பந்தில் அவர் சிங்கிள் எடுக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி, ஒரு வேளை பேட்டில் பந்து படவில்லை என்றாலும் ஓடியே ரன் எடுத்துவிடலாம் என சவுத்ரியிடம் அவர் கூறிவிட்டு வந்தார்.

image

தோனி அந்த முடிவை எடுக்காமலே இருந்திருக்கலாம்!

ஒருவேளை கீப்பர் அடிப்பதற்குள் சவுத்ரி வந்துவிடுவார் என்றோ, கீப்பர் ஸ்டம்பை மிஸ் செய்வதற்கும் வாய்ப்பு உண்டு என்றோ தோனி நினைத்திருக்கலாம். ஆனால், அவர் நினைத்தற்கு மாறாக எல்லாம் நடந்துவிட்டது. என்ன செய்வது இஷான் கிஷான் சரியாக குறிபார்த்து ஸ்டம்பை தகர்ந்துவிட்டார். சென்னை அணி 97 ரன்களில் ஆட்டமிழந்து.

ஒருவேளை தோனி இன்னும் இரண்டு ஓவர்கள் களத்தில் இருந்திருந்தால் ஒரு 20 ரன்களாவது கிடைத்திருக்கும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக சென்னை அணி போராடியிருக்கலாம். ஏனெனில் மும்பை அணியும் பவர்பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. 120 ரன்களை கடந்து இருந்தால் சென்னை வீரர்கள் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடி இருப்பார்கள்.

image

உண்மையில் முகேஷ் சவுத்ரி இருந்த இடத்தில் ஜடேஜா போன்ற யாராவது இருந்திருந்தால் நிச்சயம் ரன் அவுட் ஆகியிருக்கமாட்டார்கள். எப்படியாவது ஓடிவந்து இருப்பார்கள். ஆனால், பந்து ரிலீஸ் ஆகும் வரை முகேஷ் சவுத்ரி க்ரீஸில் தான் இருந்தார். அவர் இன்னும் கொஞ்சம் முனைப்புடன் ஓடி வந்திருக்கலாம். 

மும்பை அணியில் திலக் வர்மா 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தார். விக்கெட்டுகள் சரிந்த நேரத்தில் தோனியைப் போல் நிதானமாக விளையாடி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சென்னை அணியிலும் முகேஷ் சவுத்ரி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி தொடக்கத்தில் மும்பைக்கு நெருக்கடி கொடுத்தார்.

image

எப்படியே சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. சென்னை அணி இன்றைய போட்டியில் எப்படியும் வெற்றி பெற்று பிளே ஆஃப்க்கான வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் சிஎஸ்கே ரசிகர்கள் இருந்தார்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால்தான் அடுத்த இரண்டு போட்டிகளும் கொஞ்சமேனும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும். ஆனால், சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றியைத்தான் இனி அவர்களது எதிர்பார்ப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்