Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44 ஆயிரம் கோடிக்கு ஏலம் - டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய வையாகாம் 18

புதுடெல்லி: 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44,075 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேவேளையில் டிஜிட்டல் உரிமத்தை ரூ. 20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிரித்து ஏலம் விடுவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது. மின்னணு ஏலத்தின் 2-ம் நாளான நேற்று ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியுள்ளது. டிஜிட்டல் உரிமத்தை ரூ. 20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இந்த பிரிவுகளின் மூலம் பிசிசிஐக்கு ரூ.44,075 கோடி வருமானம் கிடைக்கும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்