சென்னை: சிங்கப்பூரின் ‘டிஎஸ்-இஓ’ உட்பட 3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-53 ராக் கெட் மூலம் இன்று (ஜூன் 30) மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.
0 கருத்துகள்