Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் - சமந்தா, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நடிகைகள் சமந்தா, கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகை நயன்தாராவுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சுமார் 6 வருடங்கள் இவர்கள் இருவரும் காதலித்து வந்தநிலையில், அண்மையில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். இதையடுத்து மகாபலிபுரத்தில் பிரபல ஓட்டலில், இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நண்பர்கள், உறவினர்கள் சூழ, அவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது.

image

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து, நயன்தாராவின் நெருங்கிய தோழியான நடிகை சமந்தா, இவர்களின் திருமணத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேலைப் பளு காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை. எனினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சமந்தா. இதேபோல் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன் ஆகியோரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

image

image

image

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்