Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மீண்டும் தலைதூக்கும் கொரோனா... மக்கள் செய்யவேண்டியது என்ன? - சுகாதாரத்துறை செயலர் பேட்டி

தடுப்பூசி போடாத நபர்கள் மூலமாக புதிய வகை கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், தடுப்பூசி போடுவது அவசியம் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை (ஜூன் 12) கொரோனா மெகா தடுப்பூசி முகாம் குறித்தும் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “கடந்த 2 ஆண்டுளாக கொரோனா தொற்றும் அதன் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து ஒரு சில நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, கேரளா, டெல்லி மாநிலத்தில் தொற்று அதிகரித்து இருக்கிறது.

image

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு 90 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 200 ஆக உயர்ந்து இருக்கிறது. அதேபோல் சென்னையில் ஒரு நாள் தொற்று 100 ஐ தாண்டும் அளவு அதிகரித்து இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இதன் தீவிரத்தை உணர்ந்து, தமிழக முதல்வர் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். 

இதையும் படிங்க... எடை குறைப்புக்கு பட்டினி கிடப்பது சரியா? - விளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/Usz2vGgdIrQ" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

சமீபத்தில் BA4, BA5 ஆகிய புதிய திரிபு தொற்றுதான் அதிகம் பதிவாகி வருகிறது. தடுப்பூசி போடாதவர்கள் மூலமே இந்த தொற்று பரவும் நிலை ஏற்படக் கூடும் என்பதால், வரும் மெகா தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வரை 11.8 கோடி தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. போடாத நபர்கள் தடுப்பூசி போடுவது அவசியம்.

image

தமிழகத்தில் கொரோனாவை கையாள மருத்துவமனை படுக்கை வசதிகள், ரெமிடஸ் மருந்து உள்ளிட்டவை கையிருப்பில் இருக்கிறது. ஆனாலும் தடுப்பூசி அவசியமானது. BA4, BA5 பாதிக்கப்பட்டவர்கள் கூட தடுப்பூசி போட்டவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். எனவே முகக்கவசம், சமூக இடைவெளி அவசியமாக கடைபிடிக்க வேண்டும். 10 விழுக்காடு பாதிப்பு எந்த மாவட்டத்திலும் தற்போது இல்லை. இதில் பாதிப்பு அதிகமானால் தான் கட்டுப்பாடுகள் தேவையா என்பதை வல்லுனர்கள் குழு தெரிவிப்பார்கள்” என தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்