அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து நெட்டிசன்களின் கேலிகளுக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறார். அண்மையில் தனது குடும்பத்துடன் கடற்கரை இல்லத்திற்கு சென்றிருந்த போது அங்கு சைக்கிளிங் செய்துக் கொண்டிருந்த ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போதும் பைடன் கடுமையான கிண்டலுக்கு ஆளானார். இப்படி இருக்கையில் மீண்டும் நெட்டிசன்கள் விமர்சிக்கும் வகையில் அதிபர் பைடனின் செயல் அமைந்திருப்பதற்கு புதிய வைரல் வீடியோவே சாட்சியாக உள்ளது.
இந்த முறை, 79 வயதான பைடன் கூறிய ஒற்றை வார்த்தையால் அவர் வைரல் கண்டென்ட் ஆகியிருக்கிறார். நாட்டு மக்களுக்கான உரையின் போது அதிபர் பைடன், அமெரிக்கா என்ற வார்த்தையை கூற முடியாமல் தடுமாறி 'Asufutimaehaehfutbw'இப்படி கூறியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராலக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா என்பதை ஒற்றை வார்த்தையில் இப்படியும் அழைக்கலாம் எனக் குறிப்பிட்டு பைடனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். வெறும் எட்டே நொடிகள் மட்டும் கொண்ட அந்த வீடியோவை 7.2 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.
ஜோ பைடன் பேசிய வீடியோவை காண: twitter.com
ஆனால் நெட்டிசன்களின் கேலிகளுக்கு சில இணையவாசிகள் கண்டனமும் தெரிவித்து, பைடனின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஆதரவாகவும், அனுதாபமாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
முன்னதாக அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ் எனக் கூறுவதற்கு பதில், அமெரிக்காவின் முதல் பெண் அவர் என தவறுதலாக பைடன் கூறியிருந்ததும் வைரலாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ALSO READ:
Viral Video: புல்டோசரில் வந்த மணமகன்: சிவில் இஞ்சினியனர்னாலும் ஒரு நியாயம் வேணாமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்