தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், முதல் 6 போட்டிகள் திருநெல்வேலியில் உள்ள சங்கர்நகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியை சேர்ந்த சஞ்சய் யாதவ் 87 ரன்கள் எடுத்தார்.
185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் கில்லீஸ் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்டத்தின் போக்கை அணியின் கேப்டன் கௌசிக் காந்தி நிதானமாக விளையாடி மாற்றினார. அவர் 64 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 184 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 14 ரன்கள் எடுத்தனால் ஆட்டம் சமனானது இதனையடுத்து சூப்பர் ஓவர் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
சூப்பர் ஓவர்...
முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்தனர். 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நெல்லை அணி டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6 வது சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்