Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

`பெண்கள் இனி வாட்ஸ்அப்-லயே மாதவிடாய் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்’ - அறிமுகமான புதிய வசதி!

பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்துக் கொள்ள உதவும் வகையில் பீரியட் டிராக்கர் (மாதவிடாய் கண்காணிப்பு) வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

`சிரோனா ஹைஜீன்' என்ற நிறுவனத்துடன் வாட்ஸ்அப் இணைந்து, பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப்பில் கண்காணிக்க முடியும். 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு “ஹாய்” என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் பெண் பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

image

முன்னதாக பெண் பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்கள் மற்றும் அவற்றின் கடைசி கால விவரங்களை வாட்ஸ்அப் சாட் பாக்ஸில் உள்ளிட வேண்டியிருக்கும். அந்தப் பதிவை வைத்து, பயனரின் மாதவிடாய் தேதியை நினைவூட்டூதல் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகளைப் வாட்ஸ்அப்பில் பகிரப்படும். இந்த பீரியட் டிராக்கர் வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை பெற விரும்பும் பெண் பயனர்கள் செய்யவேண்டியவை:

  • 9718866644 என்ற எண்ணிற்கு `ஹாய்’ என்று அனுப்பிவிட்டு, மொபைலில் அந்த எண்ணை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின் சிரோனா, சில கேள்விகளை கேட்கும். அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவிட வேண்டும்.

image

  • தொடர்ந்து பீரியட் ட்ராக்கர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவேண்டும். அதில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது, உங்களுக்கு ரத்தப்போக்கு எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கேள்விகள் கேட்கப்படும்.
  • அந்த விவரங்களை கொடுத்தபின், உங்களின் அடுத்த மாதவிடாய் எப்போது ஏற்படும், கருமுட்டை உருவாக்கம் - கருவுறுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும் நாட்கள் - அடுத்த மாதவிடாய் காலம் உள்ளிட்டவை விரிவாக வரும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்