Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மொத்த வாக்கு 289!பதிவானதோ 329! உள்ளாட்சி இடைத்தேர்தலில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக புகார்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சி 3 வது வார்டில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3 வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என மூன்று பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

image

மொத்தம் 343 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில் காலை முதல் விறு, விறுப்பாக வாக்குபதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் முடிவில் பூத் ஏஜெண்டுகள் 289 வாக்குகள் பதிவானதாக தெரிவித்தனர். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 329 வாக்குகள் பதிவானதாக கூறினார். இதனால் அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 வாக்குகள் கூடுதலாக எப்படி பதிவானது என தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

image

மேலும் வாக்குகள் பதிவான எந்திரங்களை எடுத்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதுகுறித்து புகார் அளித்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டன.

- செய்தியாளர் : நவீன்குமார்

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்