புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 450 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடும் லெவனில் இருந்து நீக்கும்போது, நீண்ட காலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் விராட் கோலி டி20 போட்டியில் இன்றியமையாதவர் அல்ல என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த ஆல் ரவுண்டரான கபில்தேவ் கூறும்போது, “தற்போது டி 20 போட்டியில் விளையாடும் லெவனில் விராட் கோலியை வெளியே அமர வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உலகின் 2-ம் நிலை பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும்போது, முதல் நிலை வீரரான பேட்ஸ்மேனையும் நீக்கலாம்.
0 கருத்துகள்