Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் மறுப்பு: நீதிமன்றம் செல்ல நிறுவனம் முடிவு

சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட் டுள்ளார். மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் நீடித்து வந்த வழக்கு காரணமாக 4,400 கோடி டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட்டுள்ளார். இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத் தில் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீத பங்குகளைக் கொண்ட தனி முதலீட்டாளராக தாம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்ததோடு இயக்குநர் குழுவை கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்தார். பின்னர் நிறுவனத்தை வாங்கப் போவதாக அறிவித்தார். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் தனியார் நிறுவனமாக மாறும் சூழல் உருவானது. பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு முழு இடமளிக்கும் வகையில் இருக்கும் என மஸ்க் தெரிவித்தது மிகப் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் நிறுவனத்தை 4,300 கோடி டாலருக்கு வாங்குவதாக அறிவித்தார். நிறுவனத்தின் ஒரு பங்கு விலை கடந்த ஆண்டு 70 டாலருக்கு பரிவர்த்தனையான நிலையில் இவர் ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலையில் வாங்கு வதாக வெளியிட்ட அறிவிப்பு மிகக் குறைந்த தொகையாகக் கருதப்பட்டது. ஆனால் கடந்த 3 மாதங்களில் இந்நிறுவன பங்கு விலை 37 டாலர் என்ற அளவில் சரிந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்