Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா பூஸ்டர் டோஸ் - மக்களுக்காக மத்திய அரசின் அடுத்த அதிரடி முடிவு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை 15-ஆம் நாள் தொடங்கி 75 நாள்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்தர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து அரசு தடுப்பூசி மையங்களிலும் இலவச பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

image

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் 3,60,60,204 பேர் இருந்த நிலையில், அதில் இதுவரை 18,08,669 பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். அதாவது தகுதியானவர்களில் 5% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 68,50,336 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி பெற்றவர்கள். இவர்களில் 15,97,369 பேர் இது வரை அரசு மருத்துவமனைகளில் செலுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் செலுத்த தகுதியானவர்களில் 23.31% தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

image

தனியார் மருத்துவமனைகளில் 18-59 வயது பிரிவினர் 2,92,09,868 பேர் தகுதியானர்கள். இவர்களில் 2,11,300 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதாவது தனியார் மருத்துவமனைகளில் செலுத்த தகுதியானவர்களில் 0.72% பேர் மட்டுமே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்