Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோவை: மின்சாரம் தாக்கி கை, கால்களை இழந்த இளைஞர்... அரசு மருத்துவர்கள் செய்த சாதனை

கோவையில் இளைஞருக்கு செயற்கையாக இரண்டு கைகள் மற்றும் கால்களை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இவர், இரண்டு கை மற்றும் கால்களை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

image

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளைஞர் சுபாஷ். இவருடைய பெற்றோர் இருவரும் கட்டடத் தொழில் செய்பவர்கள். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மின்சார விபத்தில் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளை இழந்திருக்கிறார் சுபாஷ். இதனால் பொருளாதார சூழ்நிலையில் அனைத்து வேலைகளுக்கும் மற்றவர்களின் உதவியை நாடவேண்டியிருந்தது சுபாஷுக்கு.

image

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரின் உதவியை அவர் நாடியுள்ளார். ஆட்சியர், மறுவாழ்வுத்துறை மற்றும் மாவட்ட அரசு மருத்துவனை நிர்வாகத்திடம் சுபாஷுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்த ஆவணம் செய்திருக்கிறார்.

image

இதைத்தொடர்ந்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவனையின் முட நீக்கியல் மற்றும் விபத்துப் பிரிவு, அங்கக வடிவமைப்புத் துறை கொண்ட குழு இவருக்கு தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எடை குறைந்த இரு கைகள் மற்றும் இரு கால்களை வெற்றிகரமாக தற்போது பொருத்தி உள்ளனர்.

image

மேலும் இவருக்கு உடற்பயிற்சி, மனப்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை முட நீக்கியல் மருத்துவ நிபுணர்கள், மன நல மருத்துவ நிபுணர்கள், மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களால் வழங்கப்பட்டது.

image

தமிழகத்தில் முதன்முறையாக அரசு விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இரு கை, கால்களை இழந்தவருக்கு இலவசமாக பொருத்தப்படுகிறது. தனியாரிடம் இருந்து இந்த அங்ககங்களை தருவிக்க 2.5 லட்சம் செலவாகும் எனவும் இலவசமாக சுபாஷுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள நிலையில் தாமாகவே அவருடைய வேலைகளை செய்யும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்