உங்களது இந்த நாளை நம்பிக்கையூட்ட, ஒரு கதை இங்கே! வாழ்க்கை பாடங்களை சொல்லிக்கொடுப்பதற்காக, தன் சீடர்களை தோட்டத்துக்கு கூட்டிச்சென்றார் குருயொருவர்.
தோட்டத்துக்கு சென்றபோது, முட்டை ஓட்டுக்குள் இருந்து சிரமப்பட்டு வெளியே வரும் ஒரு பறவையை கண்ட சீடரொருவர், அதன் சிரமத்தை குறைக்க எண்ணி அவரே அதை உடைக்க எண்ணுகிறார். அப்படி அந்தப் பறவை வெளியே வந்தபின், சில நிமிடங்களில் இறந்துவிட்டது.
இதைக்கண்ட குரு, `இப்படி ஓட்டிலிருந்து சிரமப்பட்டு வெளியே வந்தால் தான் பறவைக்கு தனக்குள் ஒரு நம்பிக்கை ஏற்படும். மட்டுமன்றி, அப்போதுதான் அதன் இறக்கைகளும் பலப்படும். அதுவும் அடுத்தடுத்த வாழ்வின் போராட்டங்களுக்கு தயாராகும்’ என்றார்.
நம் வாழ்வும் அப்படித்தான். நமக்கும் நிறைய சிக்கல்கள் வரலாம்... ஆனால் அவை ஒவ்வொன்றிலிருந்தும் போராடி நாம் வெளியே வரும்போதுதான், வாழ்வை எதிர்கொள்ள நாம் கற்றுக்கொள்கிறோம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்