Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காமன்வெல்த் விளையாட்டு - பதக்கப் பட்டியலில் 6-ம் இடத்தில் நீடிக்கும் இந்தியா

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 6-ம் இடத்தில் நீடிக்கிறது.

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா மேலும் 4 வெண்கலத்தைக் கைப்பற்றியது. ஆடவர் 109 கிலோ பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங், மொத்தம் 355 கிலோ தூக்கி 3-ம் இடம்பிடித்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோவையும் அவர் தூக்கினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்