Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காமன்வெல்த் டூ பாரீஸ் ஒலிம்பிக் - மனம் திறக்கிறார் தங்கம் வென்ற தினக் கூலித் தொழிலாளி மகன் எல்டோஸ்

பிரிட்டனின் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில்தான் இந்த முறை 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. இங்கிலாந்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில் நவீனமான முறையில் கட்டமைக்கப்பட்ட அலெக்சாண்டர் மைதானத்தில் நடந்த தடகளப் போட்டிகளின்போது கடந்த வாரம் இந்திய ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. இந்திய வீரர், வீராங்கனைகள் அதிகம் சோபிக்காமல் போன மும்முறைத் தாண்டுதல் (டிரிப்பிள் ஜம்ப்) விளையாட்டில் தங்கம் வென்று ஊடக வெளிச்சத்தை தன்பக்கம் பாய்ச்ச செய்தார் எல்டோஸ் பால். கேரள மாநிலத்தைச் சேர்ந்த தினக் கூலிதொழிலாளியான கொச்சுத்தோட்டத்தில் பவுலோஸின் மகனாக பிறந்து உலக தடகள வீரர்கள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் எல்டோஸ் பால்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் டிரிப்பிள் ஜம்ப்பில் 17.03 மீட்டர் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கத்தை தனதாக்கினார் எல்டோஸ் பால். அதைத் தொடர்ந்து 17.02 மீட்டர் தாண்டி வெள்ளியை வென்றார் மற்றொரு இந்திய வீரர் அபுபக்கர். இது ஓர் அரிய சாதனையாகும். அறிமுக காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றபோது இந்த சாதனை அவருக்கு எளிதில் கிட்டவில்லை. ஏழ்மை, போதிய பயிற்சி கிடைக்காமல் அவதிப்பட்டது, பயிற்சியாளர் கிடைக்காதது என பல தடைக் கற்களைத் தாண்டித்தான் இந்த நிலையை அவர் எட்டியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்