Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யுஸ்வேந்திர சாஹல் உடன் விவாகரத்தா? - மவுனம் கலைத்த தனஸ்ரீ

சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பிரியவிருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் அதுகுறித்து மவுனம் கலைத்துள்ளார் தனஸ்ரீ.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் 2020 டிசம்பரில் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்தார். தனஸ்ரீ வர்மா ஒரு யூடியூபர். மேலும் டான்சராகவும் பணிபுரிந்து வருகிறார். தனிப்பட்ட முறையில் அவரை சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம். இதனால் சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீயும் ஒன்றாக வெளியிடும் ஷார்ட் வீடியோக்கள் இணைய உலகில் மிகப்பிரபலம். இதனிடையே, தனஸ்ரீ வர்மா, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாஹல் பெயரை நீக்கிவிட்டார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வெளிவந்தன.

image

அதனை தற்போது மறுத்துள்ளார் தனஸ்ரீ வர்மா. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ''நடனம் ஆடும்போது காலில் காயம் ஏற்பட்டது. அதனால் வீட்டில் 2 வாரமாக ஓய்வில் இருக்கிறேன். என் வீட்டில் என் கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். இந்த நேரத்தில்தான் எனக்கு மிகவும் ஆதரவு தேவைப்பட்டது. இந்த காயத்திலிருந்து விரைவில் மீண்டு வருவேன். ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகளை கடந்து செல்கிறேன். நான் கடினமாக உழைத்து படிப்படியாக என் மரியாதையைப் பெற்றுள்ளேன். இந்த ஆதாரமற்ற வதந்தியால் அதை இழக்க நான் அனுமதிக்கப் போவதில்லை. மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பரப்புங்கள். மற்றவற்றை தவிருங்கள்” என தனஸ்ரீ வர்மா பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்திய அணியின் லக்கி சார்ம் என பாராட்டப்படும் தீபக் ஹூடா.. எப்படி தெரியுமா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்