இலங்கை அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தின்போது நாகினி டான்ஸ் ஆடி பங்களாதேஷ் வீரர்களை வெறுப்பேற்றினர்.
ஆசியக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்காள தேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் 184 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் 'திரில்' வெற்றியை பெற்றது. இதன் மூலம் 'சூப்பர்-4' சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றது. 2 ஆட்டத்திலும் தோற்ற வங்காளதேசம் வெளியேறியது.
இந்தப் போட்டியில் வங்காள தேச அணியை வீழ்த்தியவுடன், இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா 'நாகினி டான்ஸ்' (பாம்பு போல் நடனமாடுவது) ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய வங்காளதேச அணி வீரர்கள் 'நாகினி டான்ஸ்' ஆடி வெறுப்பேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதற்கு பதிலடியாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, நாகினி டான்ஸ் ஆடியதை இலங்கை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன் இலங்கை அணி கேப்டன் ஷனாகா, வங்களாதேச அணியில் ஷகிபுல் ஹசனை தவிர உலகத்தர பந்துவீச்சாளர்கள் இல்லை என்று கூறினார். இதற்கு பதிலடி தரும் விதமாக பங்களாதேஷ் அணியின் இயக்குனர் காலித் மஹ்மூத், இலங்கை அணியில் பேட்ஸ்மேன்களும், இல்லை பவுலர்களும் இல்லை என்று கூறினார்.
இதையும் படிக்க: ஆசியக்கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது இலங்கை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்