பொறியியல் படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கவிருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொறியில் படிப்புகளுக்கு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கஉள்ளது. நவம்பர் 13ஆம் தேதி வரை 4 கட்டங்களாக பொறியில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும் என்றும், கலந்தாய்வில் இடங்களை தேர்வுசெய்யும் மாணவர்கள் அதில் இருந்து ஒருவாரத்துக்குள் கட்டணம் செலுத்தி கல்லூரிகளில் சேரவேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் அந்த இடம் காலியானதாக கருதப்பட்டு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என கூறியுள்ளது.
இதையும் படிக்க: ”என்னயா காட்டுக்குள்ள அனுப்ப பாக்குற..” முதுமலையில் வனத்துறை வாகனத்தை விரட்டியடித்த யானை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்