Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமெரிக்க ஓபன் | ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்கராஸ்

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ். அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூடுக்கு எதிராக விளையாடி இருந்தார். 6-4, 2-6, 7-6 (1), 6-3 என்ற செட் கணக்கில் இறுதிப் போட்டியை அவர் வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்