Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கூகுளில் வேலை பெற வேண்டுமா? இந்த ஐந்து விஷயங்களை உங்கள் விண்ணப்பத்தில் எழுதாதீர்கள்!

கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களில் நீங்கள் வேலைக்கு செல்ல விரும்பினால், உங்கள் விண்ணப்பத்தில் எழுதக்கூடாத 5 விஷயங்கள் என்னவென்று தெரியுமா?

கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களில் பணி நியமனம் பெறுவது பலருக்கு வாழ்நாள் லட்சியமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த வேலையை பெற்றுத் தரக்கூடிய முக்கியமான விஷயம் “அவர்களது விண்ணப்பம்” (Your Resume). இதன்மூலம்தான் உங்கள் கனவு நிறுவனங்களின் முதலாளிகள், தேர்வாளர்கள் உங்களைப் பற்றி பல்வேறு விவரங்களை பார்க்க, தெரிந்துகொள்ள முடியும். கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களில் நீங்கள் வேலைக்கு செல்ல விரும்பினால் உங்கள் விண்ணப்பத்தில் சேர்க்கக்கூடாத 5 விஷயங்களைப் பற்றி கூகுள் தேர்வாளர் ஒருவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கூகுளில் சிகாகோவை தளமாகக் கொண்ட மூத்த பணியாளராக இருக்கும் எரிகா ரிவேரா, உங்கள் விண்ணப்பங்களை மேலும் கவர்ச்சிகரமானதாக, கவனம் ஈர்க்கத்தக்கதாக மாற்றக்கூடிய சில முக்கிய குறிப்புகளை பட்டியலிட்டுள்ளார். டிக்டோக்கில் எரிகாவின் வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டது. மேலும் அவர் முக்கியமான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்ததற்காக பார்வையாளர்களால் பாராட்டப்பட்டார். வீடியோவில், அவர் ஆயிரக்கணக்கான வலைத்தளங்களைத் திரையிட்டதாகவும், மக்கள் தங்கள் பயோடேட்டாக்களில் தேவையற்ற தரவுகளைச் சேர்ப்பதைக் கண்டறிந்ததாகவும் கூறுகிறார்.

How to Make Your Resume : గూగుల్‌లో మీకు ఉద్యోగం కావాలా నాయనా?.. మీ రెజ్యూమ్‌లో ఈ 5 తప్పులు అసలే చేయొద్దు..! - 10TV Telugu

உங்கள் விண்ணப்பங்களில் சேர்க்கக்க்கூடாத அந்த 5 விஷயங்கள்:

1. உங்கள் ரெஸ்யூமில் முழு முகவரியையும் குறிப்பிட தேவையில்லை என்று ரிவேரா குறிப்பிட்டுள்ளார். நகரம் மற்றும் மாநிலத்தை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2. நீங்கள் இதுநாள் வரை பணியாற்றிய அனைத்து விவரங்களையும் குறிப்பிடத் தேவையில்லையாம். உங்களுக்கு நிறைய அனுபவம் இருந்தால், உங்களின் முழு பணி வரலாறையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டாம் என்று ரிவேரா குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகமோ அல்லது நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு எது தேவையோ அதை மட்டும் தெளிவாக குறிப்பிட்டால் போதும் என்கிறார் ரிவேரா.

How to Make Your Resume : గూగుల్‌లో మీకు ఉద్యోగం కావాలా నాయనా?.. మీ రెజ్యూమ్‌లో ఈ 5 తప్పులు అసలే చేయొద్దు..! - 10TV Telugu

3. ‘I helped,' 'I was responsible for” போன்ற பலகீனமான வார்த்தைகளை ரெஸ்யூமில் பயன்படுத்த வேண்டாம் என்று ரிவேரா குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலாக streamlined, managed, implemented, improved, strategized, increased, produced, and generated போன்ற வார்த்தைகளை பயன்படுத்துமாறு ரிவேரா அறிவுறுத்தியுள்ளார்.

4. மேலும் உங்கள் Referrence நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனத்தில் எதிர்ப்பார்க்கப்படும் பட்சத்தில் உங்கள் ரெஸ்யூமிலேயே “reference available upon request” என்ற வரியை இடம்பெற செய்துவிடுவது நல்லது.

How to Make Your Resume : గూగుల్‌లో మీకు ఉద్యోగం కావాలా నాయనా?.. మీ రెజ్యూమ్‌లో ఈ 5 తప్పులు అసలే చేయొద్దు..! - 10TV Telugu

5. கடைசியாக அதே சமயம் மிக முக்கியமாக ரெஸ்யூமில் முதலிலேயே குறிக்கோளை (Objective) இடம்பெறச் செய்ய வேண்டாம் என்கிறார் ரிவேரா. குறிக்கோள் சேர்க்கும் நடைமுறை மிகவும் பழமையானது மற்றும் இந்த காலத்திற்கு தேவையற்றது என்கிறார் ரிவேரா.

A Google recruiter shares the 3-part resume formula that gets noticed

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்