Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி அபார வெற்றி -ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது இந்திய அணி

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பிலிருந்து இந்திய அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. சம்பிரதாய மோதலாக நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற ஆபிகானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், விராட் கோலி களமிறங்கினர். கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

image

மறுபுறம் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டிய விராட் கோலி, 1019 நாள்களுக்குப் பிறகு சர்வதேச களத்தில் தனது சதத்தை பதிவு செய்தார். கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் இது 71வது சதம் ஆகும். அதேநேரம், டி20 கிரிக்கெட்டில் இதுவே விராட் கோலிக்கு முதல் சதம் ஆகும். சதம் எடுத்த பின்பும் அதிரடியாக ஆடிய கோலி, கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து மொத்தம் 61 பந்துகளை சந்தித்து 122 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது இந்திய அணி.

image

தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இப்ராஹிம் மட்டுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 64 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 101 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார்.

ஆசியக் கோப்பையில் இந்தியாவின் கடைசி போட்டி இதுதான். இறுதிப் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் ஞாயிற்றுக்கிழமை (செப் .11) மோதவிருக்கிறது.

இதையும் படிக்க: ஆப்கன் வீரரை பேட்டால் அடிக்க வந்த பாக். வீரர் ஆசிஃப் அலி-இருக்கையை தூக்கியடித்த ரசிகர்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்