இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிக்கு தேவையான கடைசி விக்கெட்டை இந்தியாவின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா “மன்கட்” முறையில் ரன்அவுட் செய்த்து தற்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய பெண்கள் அணி ஒரு நாள் தொடரை 3-0 என வெற்றிபெற்று முதல் முறையாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வாஷ்-அவுட் செய்து சாதனை படைத்துள்ளது.
நேற்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா அணியின் வெற்றிக்கு இன்னும் ஒருவிக்கெட் எடுத்தால் தேவை என்ற இடத்தில் கடைசி விக்கெட்டை ”மன்கட்” முறையில் ரன்அவுட் செய்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அவர் செய்த அந்த ரன்அவுட்டை இங்கிலாந்து வீரர்கள் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட இங்கிலாந்தின் வீரர்களும் ஊடகங்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களும், சில இங்கிலாந்து ஊடகங்களும் மற்றும் பல முன்னாள் இந்திய வீரர்களும் “தீப்தி ஷர்மா செய்தது சரி தான்” என்றும், கிரிக்கெட் ரூல்ஸ்ஸில் உள்ளதை தான் அவர் செய்திருக்கிறார் என்றும், ஆதரவாக பேசி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, " நன்றாக செயல்பட்டீர்கள், தீப்தி ஷர்மா. நீங்கள் செய்தது சரிதான். வேறு யாரும் சொல்ல வேண்டாம். மேலும் சிறப்பாகச் செய்தீர்கள், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் இனிமையான சுவையை ருசித்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மஜர் அர்ஷாத் கூறும்போது, "இது ஒரு சட்டப்பூர்வ நீக்கம். ஆனால் இதை விளையாட்டின் ஸ்பிரிட்டிற்கு எதிரான ஒரு விஷயம் என்று சொல்லி அநியாயமான நன்மையைப் பெற முயல்வதுதான் வேடிக்கை. நன்றாக செயல்பட்டீர்கள், தீப்தி ஷர்மா" என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்