Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குடிபோதை எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்தும் தெரியுமா? ஆல்கஹால் Disorder ஏற்பட என்ன காரணம்?

மது குடிக்க காசு கொடுக்க மறுத்ததால் 75 வயதான தன்னுடைய தாயை 55 வயது மதிக்கத்தக்க மகன் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல பார்த்த அதிர்ச்சிகர சம்பவம் கேரளாவின் திருச்சூரில் அரங்கேறியிருக்கிறது. தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை கைது செய்திருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணி கடுமையான தீக்காயங்களுடன் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி இருக்கையில் ஆல்கஹால் கொண்ட மதுவை குடிப்பதால் மனநல ஆரோக்கியத்தை குலைக்கும் பாதிப்பு. அதிகமாக மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்தால் உணர்ச்சி ரீதியான, உடல் ரீதியான பிரச்னைகளையும், துயரங்களை ஏற்படுத்தக்கூடும்.

அமெரிக்காவில் சுமார் 14.5 மில்லியன் பேர் ஆல்கஹால் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகிறது. Cleaveland Clinic-ன் கூற்றுப்படி, “ஆல்கஹால் பழக்கத்துக்கு அடிமையாவது மூளை செயல்பாட்டின் நோயாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த விரிவான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளே தேவைப்படுகின்றன. ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறுகள் லேசானவை, மிதமானவை அல்லது கடுமையானவை மற்றும் நீண்ட காலத்திற்கு உருவாக்கப்படலாம்.

image

அதிகமாக மது அருந்துவது, நீங்கள் அதை பெரிதும் சார்ந்து இருப்பவராக இருந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். இது மூளை பாதிப்பு, மனச்சோர்வு, பல்வேறு புற்றுநோய்கள், கரு ஆல்கஹால் நோய்க்குறி, கல்லீரல் ஈரல் அழற்சி, ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறார்கள்.

மது போதை அல்லது ஆல்கஹால் டிஸாடர் ஏற்பட என்ன காரணம்?

எதனால் கோளாறு ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான விரிவான ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தாலும், சில முக்கிய காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அதன்படி,

1)ஆல்கஹால் துஷ்பிரயோகத்தின் குடும்ப வரலாறு

2) குழந்தை பருவ உடல் மற்றும் பாலியல் ரீதியாக நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்

3) உணர்ச்சி மிகுந்த வலியை மறைப்பதற்கான முயற்சிகள்

ஆகியவை மூலதனமான காரணங்களாக இருக்கின்றன.

மது போதையின் அறிகுறிகள்:

* குடிப்பழக்கத்தின் மீதான ஆர்வம்.

* உடல் மற்றும் மன பாதிப்புகள் பற்றி தெரிந்திருந்தாலும் தொடர்ந்து குடிப்பது.

* வழக்கத்தை விட அதிக நேரம் குடிப்பது,
இருட்டடிப்பு மனநிலையில் இருப்பது.

* அடிக்கடி ஹேங்ஓவர் ஆவது.

* வேலை அல்லது தனிப்பட்ட உறவுகளில் கவனம் செலுத்த முடியாமல் போவது.

* வேலை செய்ய முடியாத போது பசி மற்றும் திரும்பப் பெறுதல் போன்ற அறிகுறிகள் இருப்பது.

* ஒருமுறை குடிக்க தொடங்கிவிட்டால் நிறுத்த முடியாமல் போவது.

* தூங்குவதில் சிக்கல், தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு.

* ஆன்சைட்டி எனும் கவலை மனநிலையில் இருப்பது.

* குமட்டல் ஏற்படுவது.

* அமைதியின்மை மற்றும் பந்தயக் குதிரையை போல இதயம் துடிப்பது

ஆகியவை மது குடிப்பதற்கான முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

image

மது அடிமைக்கு சிகிச்சையளிப்பது எப்படி?

நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், தாமதப்படுத்துவதற்கு முன்பே பிரச்சனையை சமாளிக்க தொழில்முறையான உதவியை நாடுவது நல்லது.

சிகிச்சைகள்:

பயிற்சி பெற்ற உளவியலாளர் அல்லது மனநல ஆலோசகரை அனுகி ஆலோசனை அமர்வுகளில் ஈடுபட்டு நிதானமாக இருப்பதற்கான வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஊக்கமளிக்கும் சிகிச்சைகள்:

போதை பழக்கத்திலிருந்து விடுபட உங்கள் மனதை வலுப்படுத்த தியானம், யோகா மற்றும் ஊக்கமளிக்கும் சிகிச்சை வகுப்புகளில் சேரவும்

மருந்துகள்:

மது அடிமை நோயிலிருந்து விடுபட ஒருவருக்கு உளவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு மருந்துகள் உள்ளன. அவற்றை முறையாக எடுத்துக்கொண்டாலே போதுமானதாக இருக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்