Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படத்தின் அப்டேட் - வெளியான தகவல்

உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் உருவாகி வந்த ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெற்றதை அடுத்து, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடித்துள்ளார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

image

அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது, இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை கேக் வெட்டி கொண்டாடினர். விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்குகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்