புதுடெல்லி: இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சமூக வலைதள நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து வந்தது. சமூக வலைதளங்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன. பொய்ச் செய்திகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், ஆபாசப் பதிவுகள் அதிகரித்துள்ளன. இவற்றை சமூக வலைதள நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறி வந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது.
அந்தப் புதிய விதிகளின்படி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் உள்ளடக்கங்கள் சார்ந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கஅந்நிறுவனங்கள் தனியே அதிகாரியை நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து மக்கள் புகார்களை விசாரிக்க ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. முதலில் ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன. ஆனால், கூகுள் நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை.
0 கருத்துகள்