Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

El Clásico | லா லீகாவில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

மாட்ரிட்: நடப்பு லா லீகா தொடரில் பார்சிலோனா அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது ரியல் மாட்ரிட் அணி. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி எல் கிளாசிகோ என அழைக்கப்படுகிறது. இந்த போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் பகுதியில் உள்ள சான்டியாகோ பெர்னாபு மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்பெயின் நாட்டில் கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர் தான் லா லீகா. கடந்த 1929 முதல் நடத்தப்பட்டு வரும் தொடர் இது. நடப்பு 2022-23 சீசனுக்கான தொடர் 92-வது சீசன் ஆகும். மொத்தம் 85 போட்டிகள். இதுவரையில் நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்