புதுடெல்லி: டிஜிட்டல் கட்டமைப்பில் தனிநபரின் தகவலுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் மத்திய அரசு ‘டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு 2022’ என்ற பெயரில் புதிய மசோதாவை வெளியிட்டுள்ளது.
தகவல் பாதுகாப்பு தொடர்பான விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதாவில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. தகவல் பாதுகாப்பு வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மசோதா குறித்து டிசம்பர் 17 வரை மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்