Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

’’90 நாட்கள் வரை கெடாது’’ - ஆவின் டிலைட் பாலை வாங்கலாமா?

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, 90 நாட்கள் கெடாமல் இருக்கும் ‘ஆவின் டிலைட்’ பசும்பாலை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும், ஒரு லட்சம் லிட்டர் டிலைட் பசும்பாலானது UHT (அல்ட்ரா-ஹை டெம்பரேச்சர்) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் 90 நாட்கள் கெடாமல் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

வீட்டுகளில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்களுக்கு, 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் டிலைட் பால் உதவியாக இருக்கும். 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் பால் என்பதால், பாலில் கெமிகல் கலக்கப்பட்டு இருக்கும் என மக்கள் அச்சப்பட்ட தேவையில்லை. இந்த ஆவின் டிலைட் 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் உள்ளது.

image
அல்ட்ரா-ஹை டெம்பரேச்சர் தொழில்நுட்பத்தில் சமன்படுத்தப்பட்டுவதால், பாலை கெட்டுப்போக வைக்கும் பாக்டீரியாகள் மட்டும் அழிக்கப்பட்டிருக்கும். இதனால் பாலை கெட்டுப்போக செய்யும் கிருமிகள் உருவாகுவது தடுக்கப்படும். மேலும் பாலில் இருக்கும் கால்சியம், மெக்னிசியம் போன்ற சத்துகள் அப்படியே தான் இருக்கும். அதனால் மக்கள் ‘ஆவின் டிலைட்’பசும்பாலை எந்தவித தயக்குமின்றி வாங்கி பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 500மி ‘ஆவின் டிலைட்’ ரூ.30 க்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் - ”4 நாளுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார்!” - ஐ.நாவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்