Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'பொறுமையை சோதித்த மழை' ரத்தான இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டி!

ஹேமில்டனில் விட்டுவிட்டு பெய்து வரும் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் 'டாஸ்' போடுவதில் 15 நிமிட தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக தீபக் சாஹரும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடாவும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

image

இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில்  களமிறங்கினர். 4.5 ஓவர்களில் இந்தியா 22 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின் ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. சுப்மன் கில் 19 ரன்னும், ஷிகர் தவான் 2 ரன்னும் அடித்திருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் மழை நின்றதை அடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 29 ஓவராக  குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து இந்தியா 12.5 ஓவர்களுக்கு 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்