Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மெட்ரோ ரயிலில் பயணிப்பதும் சாதனையா? கின்னஸில் இடம்பெற்ற அமெரிக்கரின் சுவாரஸ்யம்!

பல விநோதமான, விசித்திரமான கின்னஸ் உலக சாதனைகள் குறித்த தகவல்கள் வருவது வாடிக்கையே. அந்த வகையில், 9 மணிநேரத்திற்குள் 97 மெட்ரோ ரயில்களுக்கு சென்று வாஷிங்கடனை சேர்ந்த டிராவல் பிளாக்கர் சாதனை படைத்திருக்கிறார்.

லுகாஸ் வால் என்பவர்தான் வாஷிங்கடனின் சில்வர் லைன் சர்வீசில் கடந்த புதன்கிழமையன்று (நவ.,17) பயணித்திருக்கிறார். நியூ ஆஷ்பர்ன் நிலையத்தில் தொடங்கிய தன்னுடைய பயணத்தை 8 மணிநேரம் 54 நிமிடத்தில் ஹண்டிங்டன் நிலையத்தை அடைந்து 97 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு லுகாஸ் வால் பயணம் செய்திருக்கிறார்.

இது குறித்து தெரிவித்துள்ள கின்னஸ் நிர்வாகம், “2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்காட் பென்னெட் என்பவரின் 7 மணிநேரம் 59 நிமிடம் என்ற முந்தைய சாதனையை விட, லுகாஸ் ஒரு மணிநேரம் கூடுதலாக மெட்ரோ ரயிலில் பயணித்திருக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

image

“நீண்ட நெடிய நேரம் காலம் காத்திருக்கக் கூடிய அமெரிக்காவின் தலை நகராக இருக்கக் கூடிய வாஷிங்டன் டி.சி மெட்ரோ ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி பயணித்தேன்” என்றும், “135 நாடுகளை சுற்றி டிராவல் பிளாக்கராக இருக்கும் நான் வாஷிங்டனில் உள்ள டல்லெஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் பல காலம் காத்திருந்த பிறகே சென்றிருக்கிறேன்” என கின்னஸ் சாதனை படைத்த லுகாஸ் வால் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, டெல்லியில் உள்ல 254 மெட்ரோ ரயில் நிலையங்களையும் 16 மணிநேரம் 2 நிமிடத்தில் பயணித்து பிரபுல் சிங் என்பவர் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்