Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

FIFA WC 2022 | ஆஃப் சைடு தொழில்நுட்பம் முதல் பெண் நடுவர்கள் வரை - கத்தாரில் புதுமைகள் என்னென்ன?

ஆஃப் சைடு தொழில்நுட்பம்: வேகமான மற்றும் துல்லியமான ஆஃப்சைடு முடிவுகளை பெறும் வகையில் கத்தார் உலகக் கோப்பையில் ‘அரை தானியங்கி ஆஃப்சைடு’ தொழில்நுட்பம் (semi-automated offside Technology) பயன்படுத்தப்பட உள்ளது. இதை சுருக்கமாக எஸ்ஏஓடி என அழைக்கின்றனர். எஸ்ஏஓடி-யின் கீழ் 12 டிராக்கிங் கேமராக்கள் ஆடுகளத்தின் கூரைகளில் பொருத்தப்படும். மேலும் போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பந்தும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பந்தின் மையப்பகுதியில் ஐஎம்யு (Inertial measurement unit) என்ற சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இரு அம்சங்களும் வீரர்கள் உடம்பில் 29 இடங்களை தரவுப் புள்ளிகளாக சேகரிக்கும். ஐஎம்யு சென்சார் பந்து உதைக்கப்படும் புள்ளி, இடம், திசை ஆகியவற்றின் தரவுகளை நொடிக்கு 500 முறை வீடியோ அசிஸ்டண்ட் ரெஃப்ரி அறைக்கு அனுப்பும். வீட்டில் உள்ள ரசிகர்களும், மைதானத்தில் உள்ள பார்வையாளர்களும் நடுவரின் முடிவைப் புரிந்துகொள்ளும் வகையில் ஸ்டேடியம் திரைகளில் 3டி படங்களுடன் ஆஃப் சைடு காட்சிகள் காண்பிக்கப்படும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்