Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

`பள்ளி மாணவிகளுக்கு இலவசமா நாப்கின்கள் வழங்கணும்’- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

நாடெங்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் தேவையானோருக்கு இலவச சானிடரி நாப்கின்கள் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெயா தாக்கூர் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் சானிடரி நாப்கின்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மாதவிடாய் கால சுகாதாரம் இல்லாத நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற காரணங்களால் பல மாணவிகள் பள்ளி படிப்பையை கைவிடும் நிலை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

image

எனவே பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்வதுடன் இலவச சானிடரி நாப்கின்களை வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு ஜெயா தாக்கூர் தன் மனுவில் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: காரில் சென்றவர் மீது `ஹெல்மெட் அணியாது வாகனம் ஓட்டிய’தாக வழக்கு... காவலருக்கு அபராதம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்