Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாரம்பரிய இந்திய இசையைக் கேவலப்படுத்தினாரா ரிஷப் பந்த்? - சர்ச்சையால் விளம்பர வீடியோ நீக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நடித்த விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையை எழுப்ப, அந்த வீடியோவை சமூக வலைதள ஹேண்டில்களில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் வீரரான ரிஷப் பந்தின் ஆட்டம் சோபிக்கவில்லை என்ற காரணங்களால் அவரது இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

ரிஷப் பந்த் நடித்த அந்த ட்ரீம் லெவன் விளம்பர வீடியோவில் இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர் போன்ற தோற்றத்துடன் வருகிறார். மூன்று மைக்குகள் அருகே வந்து இந்துஸ்தானி இசை ஆலாபனை போல் செய்து செமயாக சொதப்புவார். சொதப்பி விட்டு கடைசியில் “Thank God, I followed my dream” என சொல்வார். அதாவது நல்ல வேளை, கடவுளுக்கு நன்றி, நான் என் கனவைப் பின்பற்றினேன் என ஆங்கிலத்தில் சொல்லி இருப்பார். கிரிக்கெட் மீதான தன் கனவை அவர் தொடர்ந்து பின்பற்றாமல் போயிருந்தால் தோல்வியடைந்த இசைக் கலைஞனாகியிருப்பார் என்ற ஒருவிதமான நகைச்சுவைப் பொருளில் ட்ரீம் லெவன் அந்த விளம்பரத்தை உருவாக்கி இருக்கும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்