பிசிசிஐ என்பபடும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவுக்கு, அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது கையொப்பட்ட அர்ஜென்டினா ஜெர்சியை அனுப்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. இரு அணிகளும் போராடி 3 கோல்கள் அடிக்க, பெனால்டி ஷுட் அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் கோல்கள் அடித்து அர்ஜென்டினா அணி சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை தட்டியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. அவர் அடித்த கோல்களால் தான் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அர்ஜென்டினா அணிக்காக 5-வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்று, கோப்பையை கைவசமாக்கினார் லியோனல் மெஸ்ஸி. போட்டியின் சிறந்த வீரராகவும் மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அவரது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக கோல்டன் பால் அவருக்கு வழங்கப்பட்டது.
லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மெஸ்ஸியின் வெற்றியை உலகமே கொண்டாடி வரும் இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவுக்கு, லியோனல் மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை அனுப்பி வைத்துள்ளார். இதனை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கப் பிரதிநிதியாக இருப்பவருமான பிரக்யான் ஓஜா, தனது சமூகவலைத்தளத்தில் புகைப்படமாக பகிர்ந்து, `எனக்கான ஒன்றை விரைவில் பெறுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்