முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2023-ஆம் ஆண்டில், அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய தொகுப்பு..
லாக்டவுன் காலமும்.. வொர்க் ப்ரம் ஹோம் பணியும்
கொரோனா பொதுமுடக்க காலத்தில், உலக அளவில் அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய வைத்தன. அப்போது, அவர்களுடன் தொடர்பு கொண்டு பேச ஜூம் எனப்படும் வீடியோ தொடர்பு செயலி பெரும் உதவியாக இருந்தது. பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தைச் சந்தித்த வேளையில், ஜூம் நிறுவனம் பெரும் வரவேற்பைப் பெற்று அதிக லாபத்தைச் சம்பாதித்தது.
பொதுமுடக்கத்திற்கு பின் கிளம்பிய பூகம்பம்
பொதுமுடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஜூம் செயலியின் தேவை வெகுவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக, அந்நிறுவனம் தனது செலவினத்தையும், நஷ்டத்தையும் குறைக்க பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவுசெய்து, ஆயிரத்து 300 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இது, அதன் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 15 விழுக்காடாகும். அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி எரிக் யுவான் தனது ஊதியத்தையும் 98 விழுக்காடு குறைத்துக் கொண்டிருப்பதுடன், வருடாந்திர போனஸ் தொகையையும் விட்டுக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, மற்ற உயர்நிலை அதிகாரிகளும் தங்களுடைய ஊதியத்தில் 20 விழுக்காடு குறைத்துக் கொள்ளவும், போனஸை விட்டுக்n காடுக்கவும் முன்வந்துள்ளனர்.
ஆண்டின் தொடக்கத்திலேயே 95 ஆயிரம் பேரின் பணிகள் காலி!
அமெரிக்க கம்ப்யூட்டர் நிறுவனமான டெல், 6 ஆயிரத்து 650 ஊழியர்களையும், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இபே 500 பேரையும் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் மட்டும் 95 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்மைக் காலத்தில், கூகுள் நிறுவனத்தில் இருந்து 12 ஆயிரம் பேர், மெட்டா நிறுவனத்தில் இருந்து 11 ஆயிரம் பேர், அமேசான் நிறுவனத்தில் இருந்து 18 ஆயிரம் பேர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து 10 ஆயிரம் பேர், சேல்ஸ் ;ஃபோர்ஸ் நிறுவனத்தில் இருந்து 8 ஆயிரம் பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எந்தெந்த துறைகளில் பணி நீக்கம் அதிகம்...?
சில்லறை வர்த்தகம், நுகர்வோர் சேவை, போக்குவரத்து, நிதி, உணவு, மருத்துவம், ரியல் எஸ்டேட், கல்வி ஆகிய துறைகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பைஜுஸ் நிறுவனத்தில் இருந்து 4 ஆயிரம் பேர், ஒயிட்ஹேர் ஜூனியர் நிறுவனத்தில் இருந்து 2 ஆயிரத்து 100 பேர், பைடென்டன்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆயிரத்து 800 பேர், ஓலா நிறுவனத்தில் இருந்து ஆயிரத்து 400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்