Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஸ்ரேயாஸ், கில், குல்தீப் OUT... சூர்யகுமார், ஜடேஜா IN - 2 ரன்னிற்கு 2 விக்கெட் இழந்த ஆஸி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் டிரோபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் தொடரானது நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. 9.30 மணிக்கு தொடங்கப்பட்ட போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

image

ரிஷப் பண்ட் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணியில், ரிஷப் பண்டிற்கு மாற்றுவீரராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவந்தது. இந்நிலையில் இஷான் கிஷன் அணியில் இருந்த போதும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஸ்ரீகர் பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரிஷப் பண்ட் இல்லாததால் பலவீனமாக தெரியும் மிடில் ஆர்டர் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

image

சமீப காலமாக சிறப்பான பார்மில் இருக்கும் சுப்மன் கில்லிற்கு பதிலாக, மூத்த வீரரான கேஎல் ராகுலிற்கு முதலில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீப காலமாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் சிகிச்சையில் இருந்துவந்த ரவீந்திர ஜடேஜா, ரஞ்சிக்கோப்பையில் பங்குபெற்று தனது பிட்னஸை நிரூபித்துள்ள நிலையில், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

image

சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரீகர் பரத் இருவரும் டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் போட்டியை விளையாடுகின்றனர். சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ஸ்ரீகர் பரத்திற்கு சட்டீஸ்வர் புஜாரா இருவரும் டெஸ்ட் கேப்பை வழங்கினர்.

image

இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், முகமது சமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசனே, ஸ்டீவ் ஸ்மித், மாட் ரென்சோவ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் ( கேப்டன் ), நாதன் லயன், டோட் முர்பி, ஸ்காட் போலண்ட்.

image

முதலில் பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் அற்புதமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். தனது முதல் ஓவரை வீசிய சிராஜ், முதல் பந்திலேயே லெக் பை விக்கெட் மூலம் உஸ்மான் கவாஜாவை வெளியேற்றினார். தொடர்ந்து அடுத்த ஓவரை வீசிய முகமது ஷமி டேவிட் வார்னரை போல்டாக்கி வெளியேற்றி அசத்தினார். 2 ரன்னிற்கு 2 விக்கெட்டை இழந்த ஆஸ்திரெலிய அணி 24 ரன்களில் ஆடி வருகிறது. லபுசனே மற்றும் ஸ்மித் இருவரும் களத்தில் ஆடிவருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்