Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘சுவாரஸ்ய உரையாடல்’ - அமித் ஷாவை சந்தித்த கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்‌ ட்வீட்

புது டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டர் தளத்தில் பீட்டர்சன் பகிர்ந்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை சார்பில் தலைநகர் டெல்லியில் நடத்தப்படும் மாநாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் வகையில் பீட்டர்சன் இந்தியா வந்துள்ளார். அவர் அடுத்த சில நாட்கள் இந்தியாவில்தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு வருவது தனக்கு ஊக்கம் கொடுப்பதாகவும், இந்தியாவின் விருந்தோம்பல் குறித்தும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்வீட் செய்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்