Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

WPL | குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது யூபி வாரியர்ஸ்: கிரேஸ் ஹாரிஸ் அதிரடி ஆட்டம்

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது யூபி வாரியர்ஸ் அணி. அந்த அணிக்காக 8-வது விக்கெட்டிற்கு கிரேஸ் ஹாரிஸ் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் இணைந்து 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது.

5 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் முதலாவது மகளிர் ப்ரீமியர் லீக் சீசன் சனிக்கிழமை அன்று தொடங்கியது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யூபி வாரியர்ஸ் அணிகள் ஞாயிறு அன்று விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்