ஐபிஎல் தொடக்க விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. முதல் 30 நிமிடங்கள் அர்ஜித் சிங்கின் தனது இசை மற்றும் பாடலால் ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து நடிகைகளான தமன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். விஷால் நடித்த ‘எனிமி’ படத்தில் இடம் பெற்ற மனசோ இப்ப தந்தி அடிக்குது பாடல், அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் இடம் பெற்ற உ சொல்றீயா மாமா மற்றும் சில இந்தி பாடல்களுக்கு தமன்னா நடனமாடினார்.
வணக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று கூறியபடி மேடையில் தோன்றிய ராஷ்மிகா புஷ்பா படத்தின் ஐயா சாமி சாமி, ஸ்ரீவள்ளி பாடல், ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் சில இந்தி பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து சிஎஸ்கே கேப்டன் தோனி விழாமேடைக்கு வந்தார். தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் டிராபியை மேடையில் கொண்டு வந்து வைத்தார். தொடர்ந்து வாணவேடிக்கைகள் நிகழ்வுடன் தொடக்க விழா நிறைவு பெற்றது.
0 கருத்துகள்