Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை: டாப் 10-ல் இணைந்தார் அயர்லாந்தின் ஹாரி டெக்டர்!

துபாய்: 23 வயதான அயர்லாந்து பேட்ஸ்மேன் ஹாரி டெக்டர், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இணைந்துள்ளார். அதோடு இந்தியாவின் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டிகாக்கை அவர் முந்தியுள்ளார். தற்போது 722 ரேட்டிங் உடன் 7-வது இடத்தில் அவர் உள்ளார்.

இந்த தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), ராசி வான் டெர் டுசென் (தென் ஆப்பிரிக்கா), ஃபகார் ஜமான் (பாக்.), இமாம்-உல்-ஹக் (பாக்.), சுப்மன் கில் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸி.) ஆகியோர் முதல் 6 இடங்களில் உள்ளனர். கோலி 8-வது இடத்தில் உள்ளார். டிகாக் மற்றும் ரோகித் சர்மா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்