Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'நான் என்றும் தோனியின் ரசிகன் தான்' - குஜராத் அணி பகிர்ந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டி சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், குஜராத் அணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் தான் என்றுமே தோனியின் ரசிகன் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி இடையிலான பிணைப்பு குறித்து சொல்லவே வேண்டாம். அதனை பலமுறை களத்தில் நாம் நேரடியாக பார்த்துள்ளோம். இந்த சூழலில் ஹர்திக், தோனி குறித்த தனது நினைவுகளை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்