சென்னை: ரியல்மி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை அந்நிறுவனம் திரட்டி வருவதாக பயனர் ஒருவர் ட்விட்டரில் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கென பிரத்தியேக அம்சம் ஒன்றை ரியல்மி பயன்படுத்தி வருவதாக சொல்லி, அந்த ஸ்க்ரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அது தொடர்பாக ரியல்மி எதிர்வினை ஆற்றி உள்ளது.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. அண்மையில் ரியல்மி 11 புரோ 5ஜி சீரிஸ் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது அந்நிறுவனம். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு அந்நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்