இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய முறையைப் புகுத்தி வருகிறது. மற்ற அணிகளெல்லாம் வெற்றியை கருத்தில் கொண்டு 2வது இன்னிங்ஸை முன்கூட்டியே முடித்துக் கொள்வது வழக்கம் ஆனால் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் தன் அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் என இருந்த போது டிக்ளேர் செய்தது பலவிதமான எதிர்வினைகள் ஏற்பட்டன. தெலுங்கு சினிமா உலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பென் ஸ்டோக்ஸின் இந்த டிக்ளேரை வெகுவாகப் பாராட்டி நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பலரும் இது என்ன டிக்ளேர்? அதுவும் ஜோ ரூட் நன்றாக அடித்துக் கொண்டிருக்கிறார் 450 அடித்திருக்கலாமே. குறைந்தது 420 ரன்களையாவது வைத்துக் கொண்டு டிக்ளேர் செய்யலாமே என்றெல்லாம் கருதியிருப்பார்கள். இன்று ஆஸ்திரேலியா அணி உஸ்மான் கவாஜாவின் அபாரமான 141 ரன்களுடன் 386 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனையடுத்து வெறும் 8 ரன்கள்தான் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது. வாய்ப்பு இருந்தும் ஏன் இந்த டிக்ளேர்? பென் ஸ்டோக்ஸ் என்ன பெரிய பிஸ்தாவா என்றெல்லாம் கேள்விகள் எழும் போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விதந்தோதிப் பாராட்டியுள்ளார்.
0 கருத்துகள்