Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

படமணடன தரவரச: ப.வ.சநதவகக பனனடவ

புதுடெல்லி: சர்வதேச பாட்மிண்டன் சங்கம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து 3 இடங்கள் பின்தங்கி 15-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார். 13 தொடர்களில் விளையாடி உள்ள சிந்து தற்போது 51,070 புள்ளிகள் பெற்றுள்ளார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது தரவரிசையில் 3-வது இடம் வகிக்கிறது. எம்ஆர் அர்ஜூன், துருவ் கபிலா ஜோடி 26-வது இடத்திலும், ரோகன் கபூர், ஷிக்கி ரெட்டி ஜோடி 33-வது இடத்திலும் உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்