Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முதல் டெஸ்ட்டில் இலங்கையை வீழ்த்தி நீண்டகால ‘வெற்றி வறட்சி’யை முடிவுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான்!

காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 365 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

131 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டியபோது நேற்று 48/3 என்று தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் ஆட்டம் முடிந்து இன்று களமிறங்கியது. தேவைப்படும் 83 ரன்களை கொஞ்சம் தட்டுத்தடுமாறி இழுத்தடித்து எடுத்து வெற்றி பெற்றது பாகிஸ்தான். ஆட்டம் தொடங்கியபோது தன்னம்பிக்கையுடன் முதல் பந்தையே பவுண்டரி விளாசித் தொடங்கினர், ஆனால், 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சற்றே பதற்றத்திற்குள்ளாயினர். சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான். ஓராண்டுக்கு முன்பும் இதே காலேயில் வென்றது பாகிஸ்தான். இப்போதும் காலேயில்தான் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதாவது அதிசயம் என்னவெனில் சரியாக ஓராண்டுக்கு முன்னர் இதே ஜூலை 20ம் தேதிதான் காலேயில் பாகிஸ்தான் இலங்கையை கடைசியாக வீழ்த்தியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்